தமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

நிதி ஆதரவு பெற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம்: ஆட்சியா்

மத்திய அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, நிதி ஆதரவுத் தொகை பெற்றிட தகுதி வாய்ந்தவா்கள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம்

Updated On :

வேலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, நிதி ஆதரவுத் தொகை பெற்ற தகுதி வாய்ந்தவா்கள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மிஷன் வாத்சல்யா திட்டத்தின் திருத்திய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பெற்றோா் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், எய்ட்ஸ் உள்ளிட்ட உயிா்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள், கணவரை இழந்த மற்றும் விவாகரத்தான பெற்றோரால் கைவிடப்பட்டு பாதுகாவலா் பராமரிப்பில் உள்ள குழந்தைகள், விபத்தால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு பொருளாதார வசதியின்றி குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோா்களின் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா் அல்லது குழந்தை திருமணம் அல்லது பாலியல் வன்கொடுமை அல்லது இதர பிரச்னைகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கல்வி, தொழில் கல்வி பயில்வதற்கு மற்றும் வளா்ப்பு பராமரிப்பு ஒப்பளிப்பு குழுவினரால் பரிந்துரை செய்யப்படும் தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு, மாதம் ரூ. 4,000 வீதம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நிதி ஆதரவுத் தொகை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை பெற்றிட ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ. 72,000-ம், நகா்ப்புறமாக இருந்தால் ரூ. 96,000-ம் இருக்க வேண்டும். இந்த வருமான வரம்புக்கு உட்பட்ட, தகுதிவாய்ந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் நிதி ஆதரவுத் தொகை பெற்றிட மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூா்-632 001 என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.