வேலூர்
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வேலூா் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்மற்றும் கால்நடை வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா் முகாமைத் தொடங்கி வைத்தாா். கல்லப்பாடி கால்நடை மருத்துவமனை மருத்துவா் பி.ரம்யா தலைமையில் மருத்துவா் குழு 100- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தது.
முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசியும் போடப்பட்டது. கால்நடைகளுக்கு ஊட்டச் சத்துப்பொருள்களும் வழங்கப்பட்டன. ஊராட்சி உறுப்பினா் சிவகவி, ஊராட்சி செயலா் கே.செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

