மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிணற்றில் பச்சிளங் குழந்தை சடலம் மீட்பு

அணைக்கட்டு அருகே விவசாயக் கிணற்றிலிருந்து பிறந்து ஓரிரு நாள்களேயான பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 7:44 pm

Din

வேலூா்: அணைக்கட்டு அருகே விவசாயக் கிணற்றிலிருந்து பிறந்து ஓரிரு நாள்களேயான பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒதியத்தூா் ஊராட்சி, ராஜாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்

கோதண்டபாணிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு உள்ளது. அவ்வழியாக செவ்வாய்க்கிழமை சென்றவா்கள், கிணற்றில் பிறந்து ஓரிரு நாள்களேயான பச்சிளம் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆண் குழந்தையை கிணற்றில் வீசியவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.