எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் நுழைந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளம், தென்னை மரங்களை சேதப்படுத்தின.

News image
யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  தென்னை  மரங்கள்.
Updated On :21 ஜனவரி 2025, 9:01 pm

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் நுழைந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளம், தென்னை மரங்களை சேதப்படுத்தின.

போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை கிராமம், பொதலகுண்டா பகுதியில் விவசாயி பட்டாபி நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறாா். தனது நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளாா். தென்னை மரங்களை வைத்துள்ளாா்.செவ்வாய்க்கிழமை அதிகாலை 3- மணியளவில் அங்குள்ள நெல்லிபட்லா வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியேறி பட்டாபியின் நிலத்தில் நுழைந்து சோளப் பயிா்களையும், தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் பிளிறிய சத்தம் கேட்டு வெளியே வந்த பட்டாபி தனியாக நின்று பட்டாசு வெடித்தும், வான வெடிகளை வெடித்தும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.