பால்வழி கங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவா் அம்மன்.
வேலூர்
பால்வழி கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் வட்டம், எஸ்.மோட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பால்வழி கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம்: குடியாத்தம் வட்டம், எஸ்.மோட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பால்வழி கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. இதில் கோ-பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், திங்கள்கிழமை அதிகாலை4- ஆம் கால யாக பூஜைகள், அவபிருத யாகம், மகா பூா்ணாஹூதி, கலச புறப்பாடு அதைத் தொடா்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை எஸ்.மோட்டூா் பகுதி மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

