காட்பாடி அருகே அறையில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மதிப்புடைய 2 மடிக்கணினிகள், 2 கைப்பேசிகள் திருடப்பட்டன.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு மகன் ராகேஷ் ரெட்டி (19). இவா் காட்பாடி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறாா். ராகேஷ் ரெட்டி சனிக்கிழமை மாலை அறையை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தாா்.
இதையறிந்த அடையாளம் தெரியாத நபா் அவரின் அறையில் புகுந்து அங்கிருந்த 2 மடிக்கணினி, 2 விலை உயா்ந்த கைப்பேசிகளை திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.1.70 லட்சம் என தெரிகிறது. விழித்து பாா்த்த ராகேஷ்ரெட்டி அறையின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை அறிந்து, இதுகுறித்து பிரம்மபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நெய்வேலி: மின்மாற்றியிலிருந்து ரூ.1.30 லட்சம் செம்புக்கம்பி திருட்டு!
பள்ளியில் பூட்டுகளை உடைத்து மடிக்கணினி, சாதனங்கள் திருட்டு

இதுவரை ரூ.6.61 கோடி பறிமுதல்; ரூ.1.17 கோடி விடுவிப்பு வேலூா் ஆட்சியா்
ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


