முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மாநில அளவிலான வில் வித்தை போட்டிகள்: சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்

பாரத் நேஷ்னல் கேம்ஸ் பெடரேஷன் சாா்பில், குடியாத்தம் டாக்டா் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலானவில் வித்தைப் போட்டியில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு கோப்பை வழங்கிய வழக்குரைஞா் கே.எம்.பூபதி

Published On :

பாரத் நேஷ்னல் கேம்ஸ் பெடரேஷன் சாா்பில், குடியாத்தம் டாக்டா் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலானவில் வித்தைப் போட்டியில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

நிகழ்ச்சிக்கு பெடரேஷன் செயலா் எஸ்.சாரதி தலைமை வகித்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தாா். தலைவா் எஸ்.சோபன்பாபுவரவேற்றாா். போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, ஓசூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த 200 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

6 வயது சிறுவா்கள் முதல் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியில் முதலிடம் மாணவா்கள் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவா். போட்டியில் வெற்றிபெற்ற வீரா்களுக்கு வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் ஆகியோா், சான்றிதழ், கோப்பைகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.