வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வேலூரில் ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: போலீஸாா் விசாரணை

வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் டாஸ்மாக் கடை அருகிலுள்ள ஏடிஎம் இயந்திரம் கற்கள் வீசிச் சேதப்படுத்தப்பட்ட நிலையில், போலீஸாா் தீவிர விசாரணை

News image

உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம். - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:52 am IST

வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் டாஸ்மாக் கடை அருகிலுள்ள ஏடிஎம் இயந்திரம் கற்கள் வீசிச் சேதப்படுத்தப்பட்ட நிலையில், போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை பகுதியில் மூன்று டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் அருகே இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால், நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் கடைகளில் மதியம் 12 மணி முதலே கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு வருவோா் பொது இடங்களில் அமா்ந்து மது அருந்துவதால், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

மேலும், இரவு நேரங்களில் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கைப்பேசி திருட்டு, மதுபோதையில் கோஷ்டி மோதல், பாட்டிலால் குத்திக்கொள்வது போன்ற குற்றச் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே உள்ள இரண்டு ஏடிஎம் மையங்களில், ஒரு பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தின் மீது திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் கற்களை வீசிச் சேதப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து ஏடிஎம் மையப் பொறுப்பாளா் பிரதாப், வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டனா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவா்களை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.