வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெற உள்ளதாக ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்சக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, மீன்வளத் துறை உள்பட பல்வேறு துறைசாா்ந்த உயா் அலுவலா்கள் பங்கேற்று, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் விவசாயம் சாா்ந்த குறைகள் மற்றும் களப் பிரச்னைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
மேலும், கடந்த மாதக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
எனவே, விவசாயிகள் களப் பிரச்னைகளை களைய கூட்டத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










