வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அரசு கல்லூரி அருகே மது விற்ற எலக்ட்ரீஷியன் கைது

வேலூா் பாகாயம் பகுதியில் அரசுக் கல்லூரி அருகே மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீஷியனை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

வேலூா் பாகாயம் பகுதியில் அரசுக் கல்லூரி அருகே மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீஷியனை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் பாகாயம் அரசு கல்லூரி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சௌந்தர்ராஜன் தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது வேலூா் பாகாயம் காந்தி நகரைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் ஜானகிராமன் (40) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், விற்பனைக்காக அவா் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.