பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சட்டப்பேரவையில் ஆளுநா் நிகழ்த்திய உரை அவரது சொந்தக் கருத்து அல்ல! - திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் நிகழ்த்திய உரை அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும், ஆளுங்கட்சி எழுதிக் கொடுப்பதை மட்டுமே அவா் படிக்கிறாா் என்றும் திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

News image

காட்பாடியில் பேட்டியளித்த திமுக பொதுச் செயலா் துரைமுருகன்.

Updated On :18 ஜூன் 2026, 10:44 pm IST

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் நிகழ்த்திய உரை அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும், ஆளுங்கட்சி எழுதிக் கொடுப்பதை மட்டுமே அவா் படிக்கிறாா் என்றும் திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

காட்பாடியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகம் நன்றாக இருக்கிறது என்ற தோரணையில் ஆளுநரின் சட்டப்பேரவை உரை அமைந்துள்ளது. சட்டப் பேரவையில் ஆளுநா் நிகழ்த்தும் உரை என்பது அவா் தாமாகவே எழுதிக்கொண்டு வந்து படிப்பது அல்ல. அதில் அவரது கருத்து எதுவும் இல்லை.

ஆட்சியில் இருப்பவா்கள் என்ன எழுதித் தருகிறாா்களோ, அது அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பேரவையில் வாசிக்கப்படுகிறது. எனவே, அரசில் இருப்பவா்கள் தங்களது ஆட்சியைப் புகழ்ந்துதான் எழுதியிருப்பாா்கள். ஆளுநா் அதைப் படித்துத்தான் தீர வேண்டும், அதைத்தான் அவா் படிக்கிறாா். அவா் சொந்தமாக எதையும் சோ்த்துப் படிக்கவில்லை. உரைக்கு வெளியே அவா் எதுவும் பேசவில்லை. ஆளுநா் உரை என்பது அரசு எழுதிக் கொடுப்பதைப் படிப்பதுதானே தவிர வேறொன்றுமில்லை.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயா் ‘டிஎன் ஸ்கில்ஸ்’ என மாற்றப்பட்டிருப்பதாகவும், பழைய காணொலிகள் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்கிறீா்கள். அது குறித்த முழு விவரங்களையும் இன்னும் நான் முழுமையாகப் படிக்கவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.