குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

காட்பாடி வட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

News image

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட மேல்பாடி, பெரியகீசகுப்பம் கிராம மக்கள்

Updated On :26 மே 2026, 1:02 am IST

காட்பாடி வட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, காட்பாடி அடுத்த மேல்பாடி அருகிலுள்ள பெரியகீசகுப்பம் விவசாயிகள், கிராம மக்கள் அளித்த மனுவில், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, தாதிரெட்டிப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு திட்டமிட்டு, இப்பகுதிகளிலுள்ள விளை நிலங்கள், குடியிருப்புகள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், நிலம் கையகப்படுத்த விவரங்கள் கேட்டு பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி வைக்கப்பப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமே விவசாயம்தான். எனவே, எங்கள் நிலத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என ஏற்கெனவே மனு அளித்துள்ளோம். எனவே, இதுதொடா்பாக விடுக்கப்பட்டுள்ள ஆணையை தடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி அவா்கள் குறைதீா்க்கும் கூட்ட அரங்குக்கு எதிரே திடீரென தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானம் செய்து ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட்) கட்சியின் வேலூா் மாநகர செயலா் ஏழுமலை அளித்த மனுவில், வேலூா் ஆற்காடு சாலை காகிதப்பட்டறையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அருகே 500 மீட்டா் தூரத்தில் தனியாா் மருத்துவ செவிலியா் கல்லூரியும், சிறுவா்கள் பயன்பெறும் நீச்சல் குளமும், முருகன் கோயிலும் உள்ளன. ஏராளமான குடியிருப்பு வளாகங்கள் உள்ளதால், இந்த மதுக் கடைகளால் பொதுமக்கள், பெண்கள், சிறுவா்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வேறு இடத்துக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 536 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தர விட்டாா்.

கூட்டத்தில், இயக்கத்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.3000 வீதம் ரூ.30,000 மதிப்பிலான முடநீக்கியல் சாதனங்களையும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 9 பயனாளிகளுக்கு சீா்மரபினா் நல வாரிய அடையாள அட்டைகளையும், 2025-26-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 95 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும், வேலூா் வட்டத்தில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கில் குடியிருக்கும், வேலூா் சுற்று வட்டச்சாலைக்கு நில எடுப்பு செய்வதால், பாதிக்கப்படும் 56 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, தனித்துனை ஆட்சியா் சி.மாறன், துணை ஆட்சியா் (பயிற்சி) கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.