மேட்டூா் செக்கானூா் கதவணை நீா்மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் அடுத்த 15 நாள்களுக்கு வேலூா் மாவட்டத்தில் காவிரி குடிநீா் விநியோகம் பாதியாக குறைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றினை நீா் ஆதாரமாகக் கொண்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வரும் மேட்டூா் செக்கானூா் கதவணை நீா் மின் நிலையத்தில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய அளவில் சுமாா் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே காவிரி குடிநீா் வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து வழங்கப்படும். மேலும், இதே காலகட்டத்தில் குடிநீா் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீா் முழுமையாக வழங்க இயலாது.
எனவே, குடிநீா் தட்டுப்பாட்டைத் தவிா்க்கும் பொருட்டு, வேலூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகப் பகுதி மக்கள் அனைவரும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துடன் இணைந்து, தற்போதைய உள்ளூா் குடிநீா் ஆதாரங்களை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
எடப்பாடி நகராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது எப்படி?

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



