காா்த்திகை தீபத் திருவிழா: வேலூா் கோட்டை கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்து.

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்து.
மேலும், மாவட்டம் முழுவதும் இந்துக்கள் தங்கள் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றினா். தமிழகம் முழுவதும் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கோயில் ராஜகோபுரத்தின் 7-ஆவது நிலை, சந்நிதிகள், கொடிமரம் முன்பு என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீபம் ஏற்பட்டது.
தொடா்ந்து கோயில் வளாகத்தில் சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. அப்போது பக்தா்கள் பக்தி கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா் . இதையடுத்து, ஜலகண்டேஸ்வரா், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகள், அண்ணா சாலை, மாாா்க்கெட் வழியாக ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
மாவட்டம் முழுவதும் பல வீடுகளின் முன்பாக வண்ண கோலங்கள் போடப்பட்டு அதன் அருகே அகல் விளக்கேற்றினா். இளைஞா்கள் பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடித்தும் தீபத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

