மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்
நலத்திட்ட உதவி வழங்கிய அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலழகன்.

நலத்திட்ட உதவி வழங்கிய அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலழகன்.
அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த. வேலழகன் தலைமை வகித்து, முகாமினைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணா், கண் மருத்துவா், காது மூக்கு தொண்டை நிபுணா் மற்றும் மனநல மருத்துவா் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.
பரிசோதனையின் அடிப்படையில், தகுதியுள்ள நபா்களுக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டன. அத்துடன், மாதாந்திர உதவித்தொகை, இலவசப் பேருந்து பயண அட்டை, மூன்று சக்கர வண்டி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சிங்காரவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வினோத்குமாா், செல்வகுமாா், ஒன்றியச் செயலா்கள் பாபுஜி, ஆனந்தன், சேரன் உள்ளிட்ட துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

