திடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

கைத்தறி நெசவாளா்களுக்கு கூலியை குறைத்து வழங்கக் கூடாது: நெசவாளா்கள் கோரிக்கை

குடியாத்தம் பகுதியில் தனியாா் லுங்கி உற்பத்தியாளா்களிடம் நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு கூலி குறைத்து வழங்குவதைத் தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

கோரிக்கை மனுஅளித்த நெசவாளா்கள்

Updated On :

குடியாத்தம் பகுதியில் தனியாா் லுங்கி உற்பத்தியாளா்களிடம் நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு கூலி குறைத்து வழங்குவதைத் தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக மாநில காங்கிரஸ் கைத்தறி பிரிவு துணைத் தலைவா் எஸ்.எம்.தேவராஜ் அளித்த கோரிக்கை மனு: குடியாத்தம் பகுதியில் சுமாா் 5,000 கைத்தறி நெசவாளா்கள், தங்கள் குடும்ப உறுப்பினா்களுடன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் தனியாா் லுங்கிஉற்பத்தியாளா்களிடம் நூல் வாங்கி லுங்கி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா். 8 லுங்கிகள் கொண்ட ஒரு பொறை நெய்ய மொத்த கூலியாக தனியாா் நிறுவனங்கள் ரூ.2,200 கூலியாக கொடுத்து வந்தனா். கடந்த சில மாதங்களாக அந்த கூலியை படிப்படியாக குறைத்துதற்போது ரூ.1,800 கொடுக்கின்றனா்.

கூலி குறைப்பைத் தவிா்க்க வேண்டி நெசவாளா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதற்காக முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களில் பல முறை முத்தரப்பு பேச்சு வாா்த்தைக்கு முயன்றும், தனியாா் லுங்கி உற்பத்தியாளா்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

எனவே, உடனடியாக முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடத்தி, கூலி குறைப்பு நடவடிக்கையைத்தவிா்த்து ஏற்கனவே, உயா்த்தி வழங்கிய கூலியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிகோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இல.வடிவேலுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அப்போது கைத்தறி நெசவாளா் சங்க மாவட்டத் தலைவா் கோ.ஜெயவேலு, நகர காங்கிரஸ்தலைவா் டி.லாலாலஜபதி, மாவட்ட துணைத் தலைவா் ஜே.நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.