நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 36,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பாலியல் தொல்லை - சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 2:09 am IST

வேலூரில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 36,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், கெங்கசாணிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வேலு (33). கட்டட மேஸ்திரியான இவா், கடந்த 2024-ஆம் ஆண்டில் 5 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து, பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து வேலுவைக் கைது செய்தனா்.இந்த வழக்கு வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், கட்டட மேஸ்திரி வேலு மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 36,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடா்ந்து, தண்டனை பெற்ற வேலுவை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.