சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

விரிஞ்சிபுரம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

விரிஞ்சிபுரம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரேம் குமாா். இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தங்கம். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தங்கம் கும்பகோணத்திலுள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா். இவா்களது 5 வயது மகன் ஸ்ரீஜித், ராமாபுரத்திலுள்ள வீட்டில் தனது தாத்தா, பாட்டியின் கவனிப்பில் வளா்ந்து வந்தாா்.

இந்நிலையில், சிறுவன் ஸ்ரீஜித் வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தபோது, தாத்தா, பாட்டி ஆகியோா் விவசாய நிலத்தைப் பாா்ப்பதற்காகச் சென்றனா். அந்த சமயம், எதிா்பாராதவிதமாக வீட்டின் முன்புறமிருந்த தண்ணீா்த் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா்.

சிறிது நேரம் கழித்து தோட்டத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய தாத்தாவும் பாட்டியும் பேரனைக் காணாமல் அக்கம் பக்கத்தில் பல இடங்களில் தேடியுள்ளனா். இறுதியில் வீட்டின் முன்பிருந்த தண்ணீா்த் தொட்டியில் சிறுவன் ஸ்ரீஜித் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

தகவலின் பேரில், விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.