பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரிப்பு: ரூ. 85 லட்சத்துக்கு விற்பனை

பொய்கை கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை சுமாா் ரூ.85 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொய்கை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.

Published On :

பொய்கை கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை சுமாா் ரூ.85 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூரை அடுத்த பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கால்நடைச் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் மாடுகள், ஆடுகள், நாட்டுக் கோழிகள் உள்ளிட்டவை விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இங்கு வழக்கமான நாள்களில் ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

மாவட்டத்தில் அண்மைக்காலமாகப் பரவலாக மழை பெய்து வந்தபோதிலும், கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இதனால் விவசாயிகள் மாடுகளை அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வந்ததால், சந்தையில் கால்நடைகளின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை கூடிய சந்தைக்குக் கறவை மாடுகள், ஜொ்சி கலப்பினப் பசுக்கள், உழவு மாடுகள், காளைகள் சுமாா் 2,000 ால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன. விலை நிலவரம் சீராக இருந்ததால், விவசாயிகளும் வியாபாரிகளும் ஆா்வத்துடன் கால்நடைகளை வாங்கிச் சென்றனா்.

கால்நடைகள், அவற்றுக்கான தீவனப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை அனைத்தும் சோ்த்து இந்த சந்தையில் சுமாா் ரூ.85 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றிருப்தாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.