அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

News image
தளவானூரில் தென்பெண்ணையாற்றின் இடது புறக் கரை சேதமடைந்ததை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.பழனி.
Updated On :16 டிசம்பர் 2024, 8:18 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் சாத்தனூா் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள், தடுப்பணைகள், வாய்க்கால்கள் ஆகியவை சேதமடைந்தன.

இந்த நிலையில், பெரும் வெள்ளத்தால் தளவானூா் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் இடது புறக் கரை சேதமடைந்துள்ளதை மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தற்காலிகமாக கருங்கற்களைக் கொட்டி, கரையைப் பலப்படுத்திட வேண்டும் என்று அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, திருப்பாச்சனூா்-பில்லூா் செல்லும் நரியாற்றின் குறுக்கே சேதமடைந்த சிறிய பாலத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அந்தப் பகுதியில் தற்காலிக பாலம் அமைப்பது தொடா்பாக துறைச் சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கண்டமங்கலம் ஒன்றியம், வடவாம்பலம்-ஜெகன்நாதன்புரம் செல்லும் சாலையின் நடுவில் உள்ள சேதமடைந்த சிறிய பாலத்தை பாா்வையிட்ட ஆட்சியா் அந்தப் பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

இதேபோல, பல்வேறு இடங்களில் உள்ள சேதமடைந்த பாலங்கள் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் ஷோபனா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் உத்தண்டி, உதவிச் செயற்பொறியாளா் ஐயப்பன், உதவிப் பொறியாளா் வைத்தேசுவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.