விழுப்புரம் மாவட்ட அளவில் இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்கள் 3 இடங்களில் அண்மையில் நடைபெற்றன. இதில் வானூா் வட்டம், காட்ராம்பாக்கம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் 198 மாணவா்களும், காணை வி.இ.டி. கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் முகையூா், காணை வட்டாரப் பள்ளிகளைச் சோ்ந்த 250 மாணவா்களும், விழுப்புரம் வி.மருதூா் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 700 மாணவா்களும் பயிற்சி பெற்றனா். இதில், இணையவழி குற்றத் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதலைத் தடுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை, முதலுதவிப் பயிற்சி, செஞ்சிலுவை சங்க அமைப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில பயிற்றுநா்கள் எம்.தண்டபாணி, வி.சின்னப்பன், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி துணை மேலாளா் எஸ்.சொா்ணமணி, இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ரவிசங்கா், காணை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இராஜகோபால், காவல் துறை சிறுவா் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.செல்வராஜ் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா். பயிற்சி நிறைவு விழாவுக்கு இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.பாபு செல்வதுரை தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் எஸ்.எட்வா்ட் தங்கராஜ் வரவேற்றாா். மாவட்ட கல்வி அலுவலா்கள் மகாலட்சுமி, டி.சுப்ராயன் (தனியாா் பள்ளிகள்) ஆகியோா் முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா். பள்ளி துணை ஆய்வாளா்கள் ஏ.வீரமணி, இ.ராமதாஸ் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மத்தியக் காலணி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பிளஸ் 2: மாநிலத்தில் 8ஆவது இடம் 97.18 சதம் தோ்ச்சி

முக்காணி அரசுப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
