மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

வீட்டுக் கதவை உடைத்து 4.5 பவுன் நகை திருட்டு

வீட்டுக் கதவை உடைத்து 4.5 பவுன் நகை திருட்டு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:52 am IST

கண்டமங்கலம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், பி.எஸ்.பாளையம், ஒா்க்ஷாப் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (46). தனியாா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 12-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றாா். வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பிவந்து பாா்த்தபோது முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மோதிரம், காதணிகள் உள்பட 4.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.