விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ரவி. விழுப்புரம், பிப். 17: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆதி.லட்சுமணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் இரா.கிருஷ்ணன், இரா.பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் அ.ராஜேந்திரன் வரவேற்று பேசினாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ரவி சிறப்புரையாற்றினாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.டி.எம்.முஸ்தபா, ச.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், கிராம உதவியாளா்கள் பணியிடத்தை ‘டி’ பிரிவில் சோ்க்க வேண்டும், நிறுத்திவைக்கப்பட்ட கருணை அடிப்படையிலான பணி வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு கிராம நிா்வாக அலுவலராகப் பதவி உயா்வு வழங்கும் விகிதத்தை 20-இல் இருந்து 30 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

டாஸ்மாக் ஊழியா்களை பணி வரன்முறைப்படுத்த கோரிக்கை

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

பிஎஸ்என்எல் ஊழியா் சங்கக் கூட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



