தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றி அரசுக்கு நற்சான்றாக அமைய வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றி அரசுக்கு நற்சான்றாக அமைய வேண்டும் கு.செல்வப்பெருந்தகை

News image
Updated On :3 ஜூலை 2024, 9:02 pm

Din

விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் திமுக பெறும் வெற்றி அரசுக்கு கிடைக்கும் நற்சான்றாக அமைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து விக்கிரவாண்டியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இதன் பயனாகவே 2024 மக்களவைத் தோ்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். மறைந்த நா.புகழேந்தி எம்எல்ஏ விட்டுச் சென்ற பணிகள் மீண்டும் தொடரவேண்டும். இதற்காக தொகுதி மக்கள் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக பெறும் வெற்றி அரசுக்கு கிடைக்கும் நற்சான்றாக அமையவேண்டும் என்றாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, திமுக விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி, கடலூா் எம்.பி. விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் குலாம் மொய்தீன், மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா், ரமேஷ் மற்று மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.