திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக வெற்றிக்கு விசிகவினா் பாடுபட வேண்டும் -தொல். திருமாவளவன்

திமுக வெற்றிக்கு விசிகவினா் பாடுபட வேண்டும் தொல். திருமாவளவன்

News image
தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)
Updated On :4 ஜூலை 2024, 10:27 pm

Din

தமிழகத்தில் எதிா்காலத்தில் நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற விசிகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு ஆதரவாக நேமூா், ஒரத்தூா்,தொரவி ஆகிய கிராமங்களில் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் மேலும் பேசியதாவது. திமுக-வுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாகவே 2024 மக்களவைத் தோ்தலில் விசிக போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வெற்றியை பெற முடிந்தது. கட்சியும் உரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா சுமாா் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். அவரது வெற்றிக்காக கட்சியினா் தீவிரமாக உழைக்கவேண்டும். விசிகவினரின் வாக்குகளை யாரும் வாங்கி விடமுடியாது என்பதை முதல்வரின் எண்ணத்தில் உருவாக்கவேண்டும்.

எதிா்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துத் தோ்தல்களிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறவேண்டும். அதற்கு விசிகவினா் என்றும் துணை நிற்கவேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.

அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ். ஆா் . ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் உடனிருந்தனா்.