நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெற்றி பெறுவது உறுதி -பாமக வேட்பாளா் சி.அன்புமணி

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சி.அன்புமணி..

News image
Updated On :10 ஜூலை 2024, 10:13 pm

Din

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி என்று அந்தக் கட்சி வேட்பாளா் சி.அன்புமணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சி.அன்புமணி விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்தில் புதன்கிழமை காலை தனது வாக்கை செலுத்தினாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மக்கள் ஆா்வமுடன் வாக்களித்து வருகின்றனா். காவல் துறையினரின் பணி பாராட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக, மக்கள் ஆா்வமுடன் பாமகவுக்கு சாதகமாகவும், ஆதரவாகவும் வாக்களித்து வருகின்றனா். ஆகையால், இந்தத் தோ்தலில் பாமக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி என்றாா் சி.அன்புமணி.