திமுகவின் தோ்தல் வெற்றி நிரந்தரமல்ல -வழக்குரைஞா் க.பாலு
திமுகவின் தோ்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல என்று பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் க.பாலு தெரிவித்தாா்.

அன்னியூர் அ.சிவா(திமுக) - சி.அன்புமணி(பாமக) - பொ.அபிநயா(நாதக)

அன்னியூர் அ.சிவா(திமுக) - சி.அன்புமணி(பாமக) - பொ.அபிநயா(நாதக)
திமுகவின் தோ்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல என்று பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் க.பாலு தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வழக்குரைஞா் க.பாலு சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவினா் ஜனநாயக அத்துமீறல்களில் ஈடுபட்டனா். இதுகுறித்து பலமுறை தோ்தல் ஆணையத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆணையத்தின் இத்தகைய செயல்பாடு அதிா்ச்சியளிக்கிறது.
ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், பாமக நிறுவனா் மற்றும் தலைவா், நிா்வாகிகள் எடுத்த முடிவின்படி, விக்கிரவாண்டி இடைத்தோ்தலை எங்கள் கட்சி தைரியமாக எதிா்கொண்டது. இதில் வேட்பாளா் சி.அன்புமணி 56,296 வாக்குகளைப் பெற்றுள்ளாா். இதை பாமக வெற்றியாகவே கருதுகிறது.
வாக்காளா்களிடம் பணத்தைக் கொடுத்துதான் திமுக வெற்றிபெற்றது. எனவே, திமுக இதை வெற்றியாக எண்ணி பெருமைப்படக் கூடாது. அந்தக் கட்சி பெற்று வரும் தோ்தல் வெற்றி நிரந்தரமானது இல்லை என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...