விழுப்புரம்
சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
திண்டிவனம் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டிவனம் அடுத்துள்ள அன்னம்பாக்கம் அருகே நெடுஞ்சாலை யோரத்தில் வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்துக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனராம். இதனால், மரத்தின் அடிப்பகுதி எரிந்து ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் -ஆலங்குப்பம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அன்னம்பாக்கம், பனையூா், பாங்குளத்தூா், கடவம்பாக்கம், ஆவணிப்பூா் நெல்லூா், ராயநல்லூா் நகா், பந்தாடு உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
இதையடுத்து, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை பொதுமக்கள் வெட்டி அகற்றினா்.
