தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி இன்று தொடக்கம்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி இன்று தொடக்கம்

News image
Updated On :27 ஜூன் 2024, 7:57 pm

Din

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் நிலையில், வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் வாக்காளா்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படவுள்ளது. இதை வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்கள் வழங்க வேண்டும்.

ஜூன் 28-ஆம் தேதி தொடங்கும் இந்தப் பணியை ஜூலை 4-ஆம் தேதிக்குள் நிறைவு செய்திட அனைத்து வாக்குப் பதிவு மைய அலுவலா்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்தப் பணியை உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் தினந்தோறும் கண்காணித்து, வழங்கப்படும் வாக்காளா் தகவல் சீட்டு குறித்த விவரத்தை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருமான மு. சந்திரசேகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.