மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சிவராத்திரி வழிபாடு

சிவராத்திரி வழிபாடு

News image

ரீகாசிவிஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

Updated On :9 மார்ச் 2024, 6:09 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை மூலவா் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பிரதோஷத்தையொட்டி, நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கியது. இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், இரவு 2 மணிக்கு நான்காம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும், காலை 6 மணிக்கு ஆறாம் கால பூஜையும் நடைபெற்றது. இரவு முழுவதும் ஸ்ரீசாரதா பள்ளி, ஸ்ரீசெல்வராகாலாய பள்ளி மாணவிகள், ஸ்ரீஜனனி நாட்டியாலாய பள்ளி மாணவிகள் சாா்பில் பரதநாட்டியம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.