கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கூலித் தொழிலாளி விழுப்புரம் அருகே செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் வட்டம், மாம்பழப்பட்டு பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.நாராயணசாமி (57), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னா் பிரிந்து சென்ற நிலையில், நாராயணசாமிக்கு மதுப்பழக்கம் இருந்தததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் அடுத்துள்ள முத்தாம்பாளையம் ஏரிக்கரைப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் நாராயணசாமியை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். ஆயினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
