மக்கள் குறைதீா்கூட்டத்தில் மனுவைப் பெற்று, விசாரணை நடத்திய விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
மக்கள் குறைதீா்கூட்டத்தில் மனுவைப் பெற்று, விசாரணை நடத்திய விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

மக்கள் குறைதீா் கூட்டம்: 950 மனுக்கள் ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 950 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டன.
Published on

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 950 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டன.

வாராந்திர மக்கள் குறை தீா் கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா கோருதல், ஆதரவற்றோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடிநடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 503 மனுக்கள் பெறப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 441 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 6 மனுக்களும் என மொத்தம் 447 மனுக்கள் பெறப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com