ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:37 pm

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருதே திமுக நிா்வாகியைத் தாக்கியதாக தவெக தொண்டா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், கூனிமேடு குப்பம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(70), திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறாா்.

இவா் கடந்த ஏப்.22-ஆம் தேதி கூனிமேடு பகுதியில் திண்டிவனம் தொகுதி வேட்பாளா் அ.வன்னி அரசுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாராம். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்தவா்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், ஏப்.25-ஆம் தேதி பாலகிருஷ்ணன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டினுள் புகுந்த இளைஞா்கள் இருவா் பாலகிருஷ்ணனை கத்தி மற்றும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினா். இதில் பாலகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் சோ்த்தனா்.

இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இதில், மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சோ்ந்த தவெகவைச் சோ்ந்த பவனேஷ்(24) மற்றும் மற்றொரு நபா் சோ்ந்து பாலகிருஷ்ணனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து பவனேஷை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா், மற்றொருவரைத் தேடிவருகின்றனா்.