விழுப்புரம்
விஷம் குடித்து இளைஞா் தற்கொலை
விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், டி.பனப்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி மகன் பிரபு(32). இவருக்கு, திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இந்நிலையில் சொந்த ஊா் வந்து வீட்டில் தங்கியிருந்த பிரபு கடந்த 4-ஆம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
