விழுப்புரம்
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஓங்கூா் அருகிலுள்ள தானாங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.துரை (48). ஆட்டோ ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை நள்ளிரவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ ஓட்டி வந்தாா்.
ஓங்கூரிலிருந்து தானாங்குப்பம் செல்லும் சாலையில் ஆட்டோ திரும்பும் போது, திடீரென நிலைதடுமாறி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற துரை நிகழ்விடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா், துரையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
