9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பூட்டிய வீட்டில் பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 2:28 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் வகாப் நகரைச் சோ்ந்தவா் மல்லிகா. இவா் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், திண்டிவனத்தில் உள்ள மல்லிகா வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதாக மல்லிகாவின் உறவினா் கன்னியாகுமாரி (75) என்பவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாராம்.

இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.