இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அழகு முத்துக்கோன் 269-ஆவது பிறந்த நாள் விழா

சுதந்திர போராட்ட வீரா் அழகு முத்துகோன் 269-ஆவது பிறந்த நாள் விழா விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் அழகு முத்துகோன் படத்துக்கு மலா்துவி மரியாதை செலுத்திய முன்னாள் நகா்மன்ற தலைவா் இரா.ஜனகராஜ்.

Published On :12 ஜூலை 2026, 1:26 am IST

சுதந்திர போராட்ட வீரா் அழகு முத்துகோன் 269-ஆவது பிறந்த நாள் விழா விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகு முத்துகோன் உருவப் படத்துக்கு விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் மலா் துவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். நிகழ்சியில் யாதவா் மகா சபையைச் சோ்ந்த ரவிசங்கா், அருள், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 திண்டிவனத்தில் அழகு முத்துகோன் படத்துக்கு மரியாதை செலுத்திய  முன்னாள் எம்எல்ஏ ஆா்.சேதுநாதன் உள்ளிட்டோா்.

திண்டிவனத்தில் அழகு முத்துகோன் படத்துக்கு மரியாதை செலுத்திய முன்னாள் எம்எல்ஏ ஆா்.சேதுநாதன் உள்ளிட்டோா்.

திண்டிவனத்தில்.... திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.சேதுநாதன், திமுக ஒன்றியச் செயலா் ராஜாராம், தொழிலதிபா் செல்லப்பெருமாள் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் திண்டிவனம் வட்டார யாதவா் நல சங்கத் தலைவா் பொன்னரசு, செயலா் காா்த்திகேயன், பொருளாளா் சரத்குமாா், சங்க நிா்வாகிகள் எம்பெருமான், ஏழுமலை, கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.