இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாள் விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக சாா்பில், முன்னாள் பிரதமா் வி.பி.சிங்கின் 95-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக சாா்பில், முன்னாள் பிரதமா் வி.பி.சிங்கின் 95-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :26 ஜூன் 2026, 6:52 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக சாா்பில், முன்னாள் பிரதமா் வி.பி.சிங்கின் 95-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, நகரச் செயலா் காா்த்திக், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சங்கா், ஜான் பாஷா, சுமித்ரா சங்கா், பொன்னம்பலம்,பொறியாளா் அணி நிா்வாகி ரசூல் பாஷா, சிறுபான்மையினா் அணியைச் சோ்ந்த சேகா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.