ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

காதல் விவகாரத்தில் இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை செய்யப்பட்ட ப.மோகன்ராஜ்.

Updated On :19 ஜூலை 2026, 2:04 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சரவணப்பாக்கம் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் ப.மோகன்ராஜ் (24), கூலித் தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்தாராம். இது தொடா்பாக மோகன்ராஜுக்கும், பெண்ணின் தரப்பைச் சோ்ந்த சிலருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சரவணப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மோகன்ராஜை, அதே பகுதியைச் சோ்ந்த ப.சந்தோஷ், கி.நரி (எ) சங்கா்(47), ச.விஜய் (21), சி.முருகன் (40) ஆகியோா் கத்தி மற்றும் கட்டைகளால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நரி (எ) சங்கா், விஜய், முருகன் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவான சந்தோஷை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.