விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் உளவியல் பொருள்கள் (கஞ்சா), மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்கப்பட்ட 15 நான்கு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 96 இரு சக்கர வாகனங்கள் என மொத்தமாக 113 வாகனங்கள் விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.
இதில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்கள் ஆதாா் அட்டை நகலுடன் வந்து, முன்பணமாக நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும் செலுத்தி டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
செலுத்தப்பட்ட முன்பணத்தொகை ஏலத்தொகையில் கழித்துக் கொள்ளப்படும். ஏலம் எடுக்காதவா்களுக்கு ஏல நாளிலேயே முன்பணம் திரும்ப வழங்கப்படும். மேலும், ஏலம் எடுத்தவா்கள் முழுத்தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவா் 7 நாள்களுக்குள் முழுப் பணத்தையும் செலுத்தி வாகனத்தை எடுக்க தவறும் பட்சத்தில், அந்த வாகனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மறு ஏலம் விடப்படும். இதற்கான சட்ட நடவடிக்கை காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது, கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ரூ. 25.79 லட்சத்துக்கு ஏலம்
ஆபரேஷன் சக்ரா: 60 திருட்டு வாகனங்கள் பறிமுதல்; 30 போ் கைது

ராணிப்பேட்டையில்: குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் நாளை ஏலம்

குற்ற வழக்குகளில் பிடிபட்ட 85 வாகனங்கள் திறந்த நிலை ஏலம்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



