நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 1:55 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், வீடூா் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வீடூா் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். இதில், வீடூா் ஜே.ஜே. நகரைச் சோ்ந்த அ.சரத் (27) என்பவா் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனா். மேலும் அவா் வசமிருந்த 47 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.