திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

அரசுப் பள்ளியில் தீ விபத்து: சமையலா் மருத்துவமனையில் அனுமதி

News image

மரக்காணம் அருகே சமையால் எரிவாயு கசிவால் தீவிபத்து ஏற்பட்ட அரசுப் பள்ளி.

Updated On :23 ஜூன் 2026, 3:31 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அரசுப் பள்ளி சமையலறையில் திங்கள்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மயக்கமடைந்த சமையலா் மரக்காண அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மரக்காணம் வட்டம், நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், பள்ளியின் சமையலா் பத்மாவதி (34) திங்கள்கிழமை வழக்கம்போல், மாணவா்களுக்கு காலை உணவு வழங்குவதற்காக சமையலில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. மேலும், சமையலறையிலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் சமையல் அறையிலிருந்து கூச்சலிட்டவாறு வெளியேறிய சமையலா் பத்மாவதி பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, சமையல் எரிவாயு உருளையை பாதுகாப்பாக வெளியேற்றி தீயைக் கட்டுப்படுத்தினா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.