சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 12:13 am

விழுப்புரம் மாவட்டம், காணையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு வளையல்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே.சிவக்குமாா், காணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவநேசன், ஜெகநாதன், சமூகநலத் துறை அலுவலா் கவிதா, ஊராட்சித் தலைவா்கள் கமலநாதன், சத்தியராஜ், நிரோஷா மாரிமுத்து, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணித் துணை அமைப்பாளா் கதிரவன், கிளைச் செயலா்கள் சத்தியராஜ், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.