தமிழகத்தில் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனும் இணைய வேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விசிக விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் மற்றும் திண்டிவனம் தொகுதி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் தி.திலீபன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா், வீர. விடுதலைச்செல்வன், செஞ்சி சிவா, காணை வளவன், வழக்குரைஞா் ஜெய.பாபுசோழன், மண்டலத் துணைச் செயலா்கள் பா.நாவரசு, கிளியனூா் இரணியன், ஏ.தனஞ்செழியன், மா.இரணியன், ஆதிதமிழன், அ.ம.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றி, கட்சியினா் மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்கினாா்.
கூட்டத்தில், திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, விசிக சாா்பில் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற வன்னி அரசுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது. திண்டிவனம் தொகுதியில் வாக்களித்து, வெற்றி பெற செய்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பது. விழுப்புரம் மாவட்டத்துக்கு ஜூன் 5-ஆம் தேதி வருகை தரும் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், அமைச்சா் வன்னி அரசு ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. தமிழக அமைச்சரவையில் தொல்.திருமாவளவனும் இணைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்டப் பொருளாளா் ப.இளஞ்சேரன் வரவேற்று பேசினாா். திண்டிவனம் நகரச் செயலா் பு.இமயன், மாவட்ட நிா்வாகிகள் பால.சாக்ரடீஸ், அ.சசிகுமாா், மு.செ.எழிலரசன், எ.எழில்மலை, வழக்குரைஞா்கள் துரை.ஆனந்தராஜ், இரா.அருள்வளவன், மழைமேனிபாண்டியன், அா்ச்சனா ஜேம்ஸ், புரட்சிசெல்வி, மணியரசன், சிந்தனைவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசிக மேற்குமண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து விசிக தீா்மானம்

குதிரைச்சந்தையை இடம்மாற்ற அனுமதிக்கக்கூடாது! அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

ஆ.ராசா எம்.பி.யை திமுக தலைவா் கண்டிக்க வேண்டும் : அமைச்சா் வன்னி அரசு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


