தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுறறுலா ஸத்லங்கள் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுற்றுலா ஸ்தலங்கள், கோயில்கள் மற்றும் வழிபாட்டு ஸ்தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் தீமைக்கள் குறித்தும், குபையில்லாத பகுதியாக மாற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தை கீழசன்னதியில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவிஆட்சியர் (பொறுப்பு) பாதாளம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், நடராஜர் கோயில் செயல்அலுவலர் (பொறுப்பு) கே.கிருஷ்ணகுமார், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் சீ.சரவணபாண்டியன், சிதம்பரம் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) சி.திருவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊர்வலம் விழிப்புணர்வு கோஷங்களுடன் நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழரதவீதியை அடைந்தது. ஊர்வலத்தில் உசுப்பூர், கீழபருத்திக்குடி, சி.தண்டேஸ்வரநல்லூர், நந்திமங்கலம், அகரநல்லூர், நளம்புத்தூர், சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர்கள் பங்கேற்றனர். சுற்றுலா ஸ்தலத்தை பராமரிப்பை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லைக்காளியம்மன் கோயில், பஸ் நிலையம், பிச்சாவரரம் சுற்றுலா மையம் ஆகிய பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க அலங்கார குப்பைத் தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளது என சுற்றுலா அலுவலர் சி.திருவாசகன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ்

”இதெல்லாம் ஒரு கூட்டணியா?” தவெக நிர்மல்குமார் | DMK | TVK

வேலூா் திமுக எம்.பி. மீதான தோ்தல் வழக்கில் 5 அலுவலா்களிடம் விசாரணை

”உணவுக்கே பஞ்சம் வந்துவிடும் அபாயம்!” சிலிண்டர் தட்டுப்பாட்டால் தொழிலாளர்கள் பாதிப்பு!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

