தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிளஸ்டூ தேர்வு: மறுகூட்டலுக்கு பின் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி மாவட்டத்தில் 3-ம் இடம்

பிளஸ்டூ பொதுத்தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி 1161 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக அம்மாணவி

News image
Updated On :17 ஜூன் 2013, 8:56 am

G.Sundararaj

பிளஸ்டூ தேர்வில் மறுகூட்டலுக்கு பின்னர் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி கூடுதலாக மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

பிளஸ்டூ பொதுத்தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி 1161 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக அம்மாணவி விண்ணப்பித்திருந்தார். மறுகூட்டலில் தமிழில் கூடுதலாக 14 மதிப்பெண்கள் பெற்று 1175 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதன் மூலம் மாணவி பி.ஆர்.ஸ்ரீநிதி கடலூர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும், சிதம்பரம் நகர அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஸ்ரீநிதியை பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார், தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டினர். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.