நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சிதம்பரத்தில் ரூ.75 கோடியில் புதை சாக்கடைப் பணிகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கினார்

சிதம்பரம் நகரில் ரூ.75 கோடி செலவில் புதை சாக்கடை திட்டப் பணிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

சிதம்பரம் நகரில் ரூ.75 கோடி செலவில் புதை சாக்கடை திட்டப் பணிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

சிதம்பரம் நகரில் ஏற்கெனவே புதை சாக்கடைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ரூ.75 கோடி நிதியில் புதிய புதை சாக்கடைத் திட்டம் அமைக்க ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் மூலம் மத்திய, மாநில அரசுகளிடம் நிதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை, சிதம்பரம் அருகே மணலூர் லால்புரத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான புல்பண்ணையில் நடைபெற்றது. விழாவில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று, முதல் கல்லை எடுத்துக்கொடுத்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

திட்டம் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது: சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. புதை சாக்கடை திட்டத்துக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 3 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கழிவுநீர் சேகரித்தல் பணி 2 சிப்பங்களாகவும், சுத்திகரிப்பு நிலையப் பணி ஒரு சிப்பமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் சேகரிக்கும் பணிக்காக, 150 மீ.மீ. முதல் 900 மி.மீ. வரையிலான விட்டமுள்ள கழிவுநீர்க் குழாய்கள் 55,709 மீட்டரும், ஆள் நுழைவுத் தொட்டிகள் 2,081 எண்ணங்கள், வீட்டிணைப்புகள் 10 ஆயிரம் எண்ணங்கள் வீதம் அளிக்கும் வகையிலும் செயல்படுத்தப்படும்.  பிரதானக் கழிவுநீர் உந்துநிலையம்-1, துணை கழிவுநீர் உந்து நிலையத்துக்காக 2,200 மி.மீ. நீளம் மற்றும் 400 மி.மீ. வட்டமுள்ள நெகிழிரும்புக் குழாய்கள் 4,495மீ நீளத்துக்கு பதிக்கப்பட உள்ளன.

4 மண்டலங்களில் பெறப்படும் கழிவுநீரானது, 2 இடங்களில் அமைக்கப்பட உள்ள துணை கழிவுநீர் உந்து நிலையங்களில் சேகரிக்கப்பட்டு, பின்னர் தில்லைக்காளியம்மன் கோயில் பகுதியில் அமைய உள்ள பிரதானக் கழிவுநீர் உந்து நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

அங்கிருந்து லால்புரம் புல்பண்ணை பகுதியில் அமையவுள்ள 9.44 எம்எல்டி கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு ஏஎஸ்பி முறையில் சுத்திகரிக்கப்பட உள்ளது.

சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் செல்வி ராமஜெயம், நாக.முருகுமாறன், நகர்மன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் வி.சுப்பிரமணியன், உதவி நிர்வாகப் பொறியாளர் எம்.அசோகன், அதிமுக முன்னாள் நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.ஜெகதீசன், முன்னாள் மாவட்டச் செயலர் வி.கே.மாரிமுத்து, நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், ஒப்பந்தக்காரர் ராமசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆ.ரமேஷ், பெரு.திருவரசு, சி.க.ராஜன், ஜெயவேல், நடனசபாபதி தீட்சிதர், பானுமதி, வாசுதேவன், தனராஜேந்திரன், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.