அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:59 am

தினமணி

மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணிகளை இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசால் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன. இந்த மடிக் கணினியில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வரும் சாதி, வருமானச் சான்றுகள் உள்ளிட்டவை கோரி வரும் விண்ணப்பங்களைச் சரி பார்த்து அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்து வந்தனர். ஆனால், இதுவரையில் அதற்கான இணையதளக் கட்டணம் வழங்கப்படவில்லையாம்.
 எனவே, இணையதளச் செலவினத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக் கணினிகளை அந்தந்த வட்டாட்சியர்களிடம் ஒப்படைப்பது என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
 அதன்படி, மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட 10 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது மடிக் கணினிகளைத் திரும்ப ஒப்படைத்தனர். மேலும் புதன்கிழமை அவர்கள் விடுப்பு எடுத்து, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான கிராமங்களில் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.