விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
நெய்வேலி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.


நெய்வேலி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
நெய்வேலியை அடுத்துள்ள செங்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65), விவசாயி. இவர் தீபாவளி கொண்டாட செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிக்கொண்டு புவனகிரியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். புதன்கிழமை மாலை வீடு திரும்பியவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...