சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

டெல்டா பாசனப் பகுதியில் 30 வாய்க்கால்களை தூர்வார வேண்டும்: அமைச்சரிடம் விவசாயிகள் மனு

டெல்டா பாசனப் பகுதியில் 30 வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென விவசாய அமைப்புகள் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கடலூரில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST

டெல்டா பாசனப் பகுதியில் 30 வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென விவசாய அமைப்புகள் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கடலூரில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
 இதுகுறிதது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலச் செயலர் பி.ரவீந்திரன், கீழனை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள காவிரி பாசனப் பகுதிகளில் நிகழாண்டு சம்பா சாகுபடி பருவத்துக்குள் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாரி மராமத்து பணிகள் செய்வதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு ரூ.6.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 35 பணிகளை பட்டியலிட்டு அனுமதி வழங்கியது. மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் நீர்நிலை ஆதாரங்கள், கட்டுமானங்கள், மதகுகளை சீர் செய்ய அரசால் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்குதல் நிதி ரூ.1.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கீழணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதியில் சுமார் 830 கி.மீ. தூரத்துக்கு பாசன வாய்க்கால் உள்ள நிலையில் 380 கி.மீ தூரம் மட்டுமே தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 அதிலும், பழுதுநீக்கல், பராமரிப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் கடந்த ஆண்டு வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பு நிதியில் வெட்டப்பட்ட வாய்க்காலே நிகழாண்டு பட்டியலில் சேர்க்கப்பட்டு பணி செய்யப்படுகிறது. எனவே, கூடுதலாக 30 பாசன வாய்க்கால்களை தூர் வார வேண்டும். அதன்படி வடக்குராஜன் பிரிவு பாசன வாய்க்கால்கள், வடவாறு பிரிவு பிராதன வாய்க்காலில் பீமன், சண்டன், கஞ்சங்கொல்லை வாய்க்கால்களையும், வீராணம் ஏரியின் பிரதான வாய்க்கால்களான குன்னன், சேதியூர் ஓடை, வடரெட்டை, குமுளி, சந்திரன், திருசின்னபுரம், வடக்கு, தெற்கு பூதங்குடி, கீழமூங்கிலடி உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.
 டெல்டா பகுதியில் எஞ்சியுள்ள வாய்க்கால்களை தூர்வார ரூ.9 கோடிக்கு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசிடமிருந்து நிதியைப் பெற்று பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.